Publications out for print

Showing results 11 - 20 of 58 Previous

அந்நியமாதல்

எஸ். வி. ராஜதுரை

1979 | 228 பக்கங்கள் | விலை: ரூ. 12.00 | ISBN 81-85602-12-3

‘அந்நியமாதல்’ என்ற பிரச்சினையை சமுதாய - பொருளாதார - வரலாற்று இயக்கத்திலிருந்து பிரித்து அதைப் பூடகமாக்குகிற ‘மனிதன் இவ்வுலகில் எப்போதும் தனிமையாக்கப்பட்டவன்’ என்கிற சிந்தனைப் போக்குகளும் உள்ளன. இதன் காரணமாகவே ‘அந்நியமாதல்’ என்ற பிரச்சினையைக் கிரகித்துக்கொள்வதோ, அதை நடைமுறையில் கடந்து செல்வதற்கான முழுமையான மார்க்கத்தைக் கண்டறிவதோ இயலாததாகிவிடுகிறது. போதுமான அளவு வரலாற்றுரீதியாக இப்பிரச்சினையை அணுகியவர்களே, ‘அந்நியமாதலின்’ பல்வேறு சிக்கல்களைப் புரிந்து கொள்வதில் பாராட்டத்தக்க சாதனைகளை அடைந்தனர்.

‘அந்நியமாதல்’ பற்றிய விழிப்புணர்வு, ஒரு தத்துவச் சிந்தனையில் உள்ள வரலாற்று உணர்வு இரண்டுக்கும் அடிப்படையான பிரச்சினை: மனித சாராம்சம் (அவனது உட்பொருள், உண்மைப் பொருள், சுயம்) என்பது என்ன? மனிதனின் உண்மைப் பொருளுடன் ஒத்திணைவது எது? இதிலிருந்து அந்நியமாக்கப்படுவது எது? அந்நியமாக்கப்பட்ட மானுட உட்பொருளை மீண்டும் தன்வயமாக்குவது எவ்வாறு? இப்பிரச்சினைகளை, அறிவுபூர்வமற்ற வகையில் பூடகமாக்கினால், மாயாவாதப் பிரச்சினைகளாகப் பார்த்தால், வரலாற்று ரீதியான பதில் சொல்ல முடியாது. ‘மானுட உட்பொருள்’ பற்றிய வரலாற்றுரீதியான பரிசீலனை தவிர்க்க முடியாமல் அந்நியமாதல் பற்றிய உணர்வுக்கு இட்டுச் செல்லும்.

மார்கஸ் இப்பிரச்சினையை இவ்வுலகச் சூழலில், விரிந்து வளரும் மானுட வரலாற்றுக் களத்தில், மானுடச் செயல்களில் வைத்துத் தன் விசாரணையைத் தொடங்குகிறார்.

சுவரொட்டிகள்

(நாடகம்) ந. முத்துசாமி

1980 | 40 பக்கங்கள் | விலை. ரூ. 6.00 | ISBN 81-85602-14-X

இதன் மையமான பாத்திரம் ஒரு தனி மனிதனல்ல, அவையில் அமர்ந்திருக்கும் அத்தனை பேரும்தான். வீட்டுக்கு வீடு உள்ள சுவர்களையும், அவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளையும் பார்க்கும்போது, தன்மை, முன்னிலை, படர்க்கையில் நான், நீ, அவர் என வாழ்த்தியும், வைதும் வாழ்கிற அர்த்தமற்ற தன்மையையும், சமூகத்தின் அவல நிலையையும், அதே சமயத்தில் நேரடியாகப் பங்குபெறாவிடினும், மனதிற்குள்ளாவது ஒட்டியும் வெட்டியும் பங்குபெறும் சுய நிலையையும் உணர்ந்துகொள்ள முடியும் சே. ராமானுஜம்

The Message Bearers

The Nationalist Politics and the Entertainment

Media in South India 1880-1945 S.Theodore Baskaran

1981 | Hard Bound | 220 Pages | Price Rs. 60.00 | ISBN 81-85602-16-6

This book looks at various aspects of the new entertainment forms – drama, gramophone, popular songs, cinema – during the momentous period of emerging nationalism in South India. It attempts to weave three separate strands. The first is a study of an important but neglected part of nationalist movement – the interaction of mass media with the people in an age of mass politics. Secondly, it is a study of the formative years of a regional cinema. Thirdly, it is a piece of social history detailing how the themes, opinions and crusades of popular entertainment reflected the aspirations of a society in the midst of historic changes.

This study sheds the snobbish reservations of traditional historiography in using popular sources as aids in serious historical study.

தோண்டு கிணறுகளும் அவற்றின் அமைப்பும்

S.B. வாட், W.E. உட். (தமிழில் S. பழனிசாமி)

1982 | 280 பக்கங்கள் | விலை. ரூ. 10.00 | ISBN 81-85602-19-0

குடிநீர் வசதிதான் மேம்பாடு கிராமங்களின் உடனடித் தேவை. பெரும்பாலான கிராமங்களில் கிணறுதான் குடிநீருக்கான ஒரே வசதியாக இருந்துவருகிறது. இக்கிணறுகளைச் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் எவ்வாறு அமைப்பது என்பதை இப்புத்தகம் விரிவாகச் சொல்கிறது.

தொழில்நுட்ப வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம், உள்ளூர்ச் சாதனங்கள், திறமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு கிணறுகளை அமைக்கலாம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறது. கிணறு தோண்டுதல் பற்றிய அடிப்படைகள், கிணற்றின் கட்டுமானம், மாற்று உத்திகள், தேவையான சாதனங்கள் ஆகியவற்றைப் படங்களுடன் விவரிக்கிறது இப்புத்தகம்.

கிணறு அமைப்பதைப் பற்றித் தமிழில் வெளியான முதல் புத்தகம் இது.

எக்சிஸ்டென்ஷியலிசம்
எஸ். வி. ராஜதுரை
இரண்டாம் பதிப்பு. 1983. 324 பக்கங்கள். விலை ரூ. 25.00. ISBN 81-85602-04-2

திறந்த மனத்துடன் எக்சிஸ்டென்ஷியல்வாதிகளைச் சந்திப்பது என்ற நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் இவர்களை விமர்சன நோக்கில்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வது என்பதல்ல. மனித வாழ்க்கையைப் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளை இவர்கள் எழுப்புகிறார்கள். அதன் காரணமாகவே மானுட வாழ்வினைப் பொருள் செறிந்த ஒன்றாக மாற்ற முயல்கிறார்கள் என்ற வகையில், மார்க்சியவாதிகள், மார்க்சியவாதிகள் அல்லாதோர் இருபாலார்க்குமே அறைகூவலாக விளங்குகிறார்கள் என்ற அளவில் இவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எக்சிஸ்டென்ஷியல்வாதிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் தருவதுதான் இந்நூலில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றாலும், ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து இவர்கள் அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறைக்க முடியாது.

முன்னுரையில் எஸ். வி. ராஜதுரை

(இப்புத்தகத்தின் முதலாம் பதிப்பு 1975இல் வெளியானது)

நாளை மற்றுமொரு நாளே

(நாவல்) ஜி. நாகராஜன்

1983 | 148 பக்கங்கள் | விலை ரூ. 10.00 | ISBN 81-85602-21-2

ஜி. நாகராஜனின் உலகம் வாழ்க்கையின் பின்கட்டு. முன்கட்டுக்கு என்ன என்று கேட்கலாம். திண்ணையில் பண்பாடு கொலு வீற்றிருக்கிறதே! நாம் பிறருக்குக் காட்ட ஜோடித்து வைத்திருக்கும் வேஷங்களில் கலைஞனுக்கு என்ன அக்கறை? அங்கே மடிப்புக் கலையாத அங்கவஸ்திரங்கள்; புன்முறுவல்கள்; தாம்பூலத் தட்டுக்கள்்; ஆண் சாமி படங்கள்; பெண் சாமி படங்கள்; வாங்கோ, வாங்கோக்கள்.

கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார்; இந்தத் தருணத்தில் சாரளத்தைத் திறந்ததுதான், தான் செய்த ஒரே காரியம் என்ற பாவத்துடன். கெட்டிச் சாயங்கள் என்று நாம் நம்பி வரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன. சுந்தர ராமசாமி

Vietnamese Cuisine for India

Nhung Thomas

116 Pages | Price Rs. 38.00 | ISBN 81-85602-22-0

The idea of writing this book of recipes was born out of the enthusiasm and pioneering spirit of our Madras friends, who yearned to taste their fruit and vegetable dishes in an exotic guise. In any case, though the raw material is the same, the culinary art is different in Vietnam. Variety and change are the traditional hallmarks. It is not uncommon to have six different dishes each day, day after day, with the help of Cambodian and Chinese cuisines. At the same time, while there is borrowing, the individual dishes stay, and the three cuisines do not mingle.

All the recipes presented here are typically Vietnamese, but it will not be difficult for the reader to discover a parallel dish in some part of India.

Nhung Thomas

டாக்டர் இல்லாத இடத்தில்...

டேவிட் வெர்னா. (தமிழில் ப. சங்கரலிங்கம்)

1984, 1985, 1986, 1988, 1989, 1992 | 526 பக்கங்கள் | விலை. ரூ. 90.00 | ISBN 81-85602-23-9

எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் அவசியமானது இந்தப் புத்தகம்

கிராமப்புறங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்காதவர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும் தங்கள் உடல்நலத்தைத் தாங்களே பேணிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தினால் பயனடைய முடியும்.

உடல்நலப் பிரச்சினையை எந்த அளவுக்கு ஒருவர் அறிந்துகொண்டு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும், எந்தச் சமயங்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஆசிரியர்களும் கிராமத் தலைவர்களும், இந்தப் புத்தகத்தின் உதவியால் கிராம மக்களின் உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்த முடியும.்

தாய்மார்களும் மருத்துவச்சியரும், இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள எளிமையான, பயனுள்ள தகவல்களின் உதவியுடன் வீட்டுப் பிரசவம், தாய்சேய் நலம் ஆகியவை சம்பந்தமான விஷயங்களை நன்கு புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

இடைவெளி

(நாவல்) எஸ். சம்பத்

1984 | 110 பக்கங்கள் | விலை: ரூ. 9.00 | ISBN 81-85602-25-5

வாழ்வின் அனுபவங்களும், அனுபவங்களினூடான பயணங்களில் அறியவரும் வாழ்வின் தன்மைகளும், அனுபவங்களின் சாரத்தில் உருக்கொள்ளும் கருத்துகளும், கேள்விகளும், உள்ளுணர்வின் ஒளியில் வாழ்வைத் தர்க்கரீதியாகக் காட்டும் முயற்சியும் இழையோடும் எழுத்து சம்பத்தினுடையது.

மிகக் குறைவாகவே எழுதியிருக்கும் இவர் மிக அதிகமாக எழுதும் ஆசை கொண்டிருந்தார். எழுத்துலகில் இவர் அடைய விழைந்தது, தாஸ்தாயெவ்ஸ்கியின் இடம்.

சம்பத்தின் எழுத்துகளில் முதலில் புத்தக வடிவம் பெறுவது ‘இடைவெளி’ நாவல் மட்டுமே. ‘இடைவெளி’ நாவலின் அச்சான பக்கங்களை மட்டுமே அவர் பார்த்திருந்தார். புத்தகம் முழுமை பெறுவதற்கு முன்னரே மரணம் சம்பவித்துவிட்டது.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்

(கவிதைத் தொகுப்பு) எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா

1984 | 216 பக்கங்கள் | விலை: ரூ. 20.00 | ISBN 81-85602-26-3

ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சில முக்கியமான போக்குகளைப் பிரதிபலிக்கும் பதினொரு கவிஞர்களின் 55 கவிதைகளைக் கொண்டது இத்தொகுதி. 1960 முதல் 1984வரையுள்ள சுமார் இருபது ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. மஹாகவி முதல் சேரன் (கவியரசன்) வரை ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அவ்வகையில் இருபது ஆண்டுகளையும் ஐந்து தலைமுறைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்குகிறது எனலாம்

சுந்தர ராமசாமி கட்டுரைகள்

சுந்தர ராமசாமி

1984 | 154 பக்கங்கள் | விலை. ரூ. 18.00 | ISBN 81-85602-27-1

“ஒரு நவீன தமிழ் எழுத்தாளன் ஆன நான், புதுமைப்பித்தன், மெளனி, கு. ப. ரா., பிச்சமூர்த்தி, செல்லப்பா, க. நா. சு., ராமாமிருதம், ஜானகி ராமன், அழகிரிசாமி இவர்களுக்குப் பின்னால் வந்தவன் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்கிறேன். சிருஷ்டிகள் மூலம் அவர்கள் பவித்திரப்படுத்தியும் கூராக்கியும் தந்த வார்த்தைகள் என் வேலைக்குப் பயன்படுகின்றன என்பது எனக்குத் தெரியும்...

வாழ்வின் அந்திமதசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும்: “என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசிவரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த பாஷையை மலினப்படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக்கொண்டேன்.”

என்று கூறும் சுந்தர ராமசாமியின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது.

Showing results 11 - 20 of 58 Previous