க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

காவிரி வெறும் நீரல்ல

தங்க. ஜெயராமன்

பக்கங்கள் : 96
ISBN 978-93-82394-39-6
விலை: ரூ. 160 + அஞ்சல் செலவு

காவிரிக் கரைக் கலாச்சாரத்துக்கு அடையாளம் கேட்டால் கோயிலை,
கர்நாடக இசையை, பரதநாட்டியத்தைச் சொல்வார்கள் —சித்திரம்
பழகும் குழந்தைகள் செந்தாமரையைக் குளத்துக்கு அடையாளமாக
வைத்துக்கொள்வதைப் போல். நாளைக்கு எழுதினாலும் நம்
சிந்தனையும் எழுத்தும் இப்படியே நேற்றைய அச்சு, இன்றைய
வார்ப்பு என்பதாக வரும். வார்ப்பட எழுத்து.
வளத்தைத் தரும் காவிரி வெள்ளத்தையும் தரும். வறட்சியையும்
தரும். ஓயாது பெய்யும் மழையும் வரும். அதற்குக் காரணமான
புயலும் வரும். இவற்றைக் காவிரிக் கரைச் சமுதாயம் எப்படிப்
புரிந்துகொள்கிறது என்பதுதான் அதன் கலாச்சாரம். அது
இசையோடும் நடனத்தோடும் நின்றுகொள்வதல்ல. கலைப்
படைப்புகள் மட்டுமே கலாச்சாμமாகாது என்பதை இந்தக்
கட்டுரைகள் காட்டும்.
கால ஓட்டம் புதிய கருத்துகளைக் கொண்டுவரும். அறிவியல்,
தொழில்நுட்பப் புதுமைகள் வரும். நிர்வாக நூதனங்களும் வரும்.
இவற்றோடு காவிரிக் கரைக் கலாச்சாரம் எதையெதை எப்படிப்
பரிமாற்றம் செய்துகொள்கிறது, அதற்கு வந்த ஆதாயம் என்ன, செலவு
என்ன என்பதையும் இந்தக் கட்டுரைகள் காட்டும்.
கட்டுரைகளின் மொழி, அறிக்கை மொழி அல்ல. ஊடக மொழி
அல்ல. ஆய்வுக் கட்டுரை மொழி அல்ல. காவிரிக் கரையை
அனுபவத்துக்குள் வைத்திருப்பவர்களிடம் புழங்கும் தமிழ்.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க