க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

(தமிழ் - தமிழ் - ஆங்கிலம்). புதிய பதிப்பு (2008)

பக்கங்கள் : 1392
23cm x 15cm
ISBN 978-81-85602-91-2
விலை: ரூ. 695 + அஞ்சல் செலவு

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், தனிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்துகொண்டிருக்கும் தொடர்கள் என்று பல கூடுதல் அம்சங்களைக் காணலாம். 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு இது. தற்காலத் தமிழில் வழங்கும் 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு இது.

இணையப் பதிப்புக்கும் சந்தா விவரங்களுக்கும்
For details of online version and subscription

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க