க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

முத்தி

(சிறுகதைகள்)
புகழ்

2002
பக்கங்கள் : 168
கெட்டி அட்டைக்கட்டு
ISBN 81-85602-83-4
விலை: ரூ. 190 + அஞ்சல் செலவு

இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் பேச்சுத் தமிழிலேயே புகழ் எழுதியிருக்கிறார். தனிமனித உறவுகளிலும், சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் நட்பு, வன்முறை, குரூரம், பரிவு, பாலுணர்வு, கபடம் போன்ற வலுவான உணர்வுகள் கனமான இழைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டெனக் கண்ணை மறைக்கும் இவை இந்தக் கதைகளில் எளிமையுடன் வெளிப்படுகின்றன. நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் அன்றாட வாழ்க்கையிலும் மனிதர்களிலும் வியப்பும், சிரிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும், நாம் சற்றும் எதிர்பாராத அனுபவங்கள் பொதிந்துகிடக்கின்றன. இவற்றை அநாயாசமான சிக்கனத்துடன் புகழ் நம்முன் வைக்கிறார். புகழின் முதல் வெளியீடு இந்தக் கதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள ஆறு கதைகள் இதுவரை வெளியிடப்படாதவை.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க