1st Edition
ISBN 978-93-82394-57-0
Price: Rs. 90 + Postage
தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை...
இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றையச் சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை.
பத்திரிகைகளின் பந்த நிர்பந்தங்களை மீறியும், இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது.
தப்பித்தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால், அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி
நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது...
மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள், அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இக்குணாதிசயங்களை, மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன், வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான். அவனது சிருஷ்டிகள் உயிர்த்துடிப்பும், அர்த்த புஷ்டியும் நிரம்பப் பெறுகின்றன.
அவை சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன.
ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
‘கோணல்கள்’ தொகுப்பின் முன்னுரையில் (1968)