க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

மொழியாகிய தமிழ் , ந. கோவிந்தராஜன்

மொழியாகிய தமிழ்

ந. கோவிந்தராஜன்

1st Edition
பக்கங்கள் : 296
ISBN 978-93-82394-56-3
விலை: ரூ. 450 + அஞ்சல் செலவு

இந்தியாவில் காலனிய அதிகாரத்தை நிறுவுவதற்கும் அதை அழிந்துவிடாமல் பேணுவதற்கும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஆங்கிலேயர்களுக்கு எழுந்த சூழலில், தமிழ் அறியாத அவர்கள் தமிழுடன் நிகழ்த்திய உரையாடல்களை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. 

சென்னை மாகாணத்திலும் லண்டனிலும் காலனிய அதிகாரிகளுக்குத் தமிழ் கற்பிக்கப்பட்ட முறைகள், தென்னிந்திய மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்துக்குத் தமிழின் மரபிலக்கணம் அடித்தளமாக அமைந்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள், ‘திராவிடம்’ என்னும் சொல்லை எல்லிஸ் பயன்படுத்திய விதம், ‘திராவிட’க் கருத்தாக்கம் குறித்து காலனிய அதிகாரி ஒருவர் எழுப்பிய, இதுவரை கவனம் பெறாத ஒரு விவாதம், எல்லிஸ் எழுதிய ‘நமசிவாயப் பாட்டு’, அந்தப் பாட்டுக்கு எழுந்த ‘அபவாதம்’, அந்த ‘அபவாத’த்தைப் போக்க அந்தப் பாட்டுக்கு சுதேசி ஒருவர் எழுதிய உரை என இந்திய காலனிய அறிவு உருவாக்கத்தின்போது தமிழ் நிலப் பகுதியில் எழுந்த ‘முணுமுணுப்பு’களைப் பதிவுசெய்கிறது இந்த நூல்.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க

அச்சில் இல்லாத வெளியீடுகளைக் குறித்த தகவல்களை இங்கு அழுத்திப் பெறலாம்.
Click here for details about out-of-print publications.

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.