இமையம்
1
பக்கங்கள் : 208
ISBN 9788195458431
விலை: ரூ. 325 + அஞ்சல் செலவு
‘பிச்சை போடுறது பெருமை இல்ல. பிச்சையெடுக்க விடாம பாத்துக்கிறதுதான் பெருமை. நாம பிறக்கிறதுக்கு, வளர்றதுக்கு, வாழறதுக்கு ஏதோ ஒரு விதத்தில உதவுனவங்களத்தான் நாம அநாதயாக்குறம். பெத்தவங்கள, உறவுக்காரங்களப் பிச்சையெடுக்க விட்டுட்டுக் கோவிலுக்குப் போறதில புண்ணியமில்ல. பிச்சை போடுறதும் நாமதான், பிச்சைக்காரங்கள, அநாதைகள உருவாக்குறதும் நாமதான். எல்லாக் காலத்திலயும் பிச்சைக்காரங்களும் அநாதைகளும் எப்பிடி உருவாகிக்கிட்டே இருக்காங்க?’
‘செவ்வாய் கிரகம் எங்க இருக்கு? நம்ப ஊர்ல கள வெட்டிக்கிட்டு இருக்கிற பொன்னம்மா எங்க இருக்கு? பல லட்சம் மைலுக்கு அப்பால இருக்கிற செவ்வாய் கிரகம் எப்படி வந்து நம்ப ஊர்ல இருக்கிற பொன்னம்மாவப் புடிச்சிருக்குன்னு சொல்றிங்க? செவ்வாய் கிரகத்துக்கும் நம்ப ஊரு பொன்னம்மாவுக்கும் சண்டயா?... உசுரோட இருக்கிறதுதாண்டா சொர்க்கம். செத்த பின்னால் சொர்க்கம் வராது... மூளயப் பயன்படுத்துறவன்தான் மனுசன். மூளயப் பயன்படுத்தலன்னா அவன் மிருகம். சாப்புடுறதும் உசுரோட இருக்கிறதும் மட்டும் வாழ்க்க இல்ல.’