க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

மீதிச் சரித்திரம், பானுமதி

மீதிச் சரித்திரம்

பானுமதி

Reprint 2023
பக்கங்கள் : 142
ISBN 9788185602561
விலை: ரூ. 195 + அஞ்சல் செலவு

தெருக்கூத்து
வகையிலான நாடகங்களை ‘முதல் தியேட்டர்என்றும் மேற்கிலிருந்து
நமக்கு வந்த மேடை நாடகங்களை ‘இரண்டாவது தியேட்டர்என்றும்
விளக்கும் பாதல் சர்க்கார், 70களின் துவக்கத்தில் இந்த ‘இரண்டாவது தியேட்டரிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டார். ‘சதாப்திஎன்ற நாடகக் குழுவை நிறுவி ஒலி, ஒளி, ஒப்பனை, மரபு-வழி மேடை ஆகியவற்றை
நிராகரித்து முற்ற மேடை அமைப்புக் கொண்ட ‘மூன்றாவது தியேட்டர் நாடகங்களை நீண்ட கூடங்களிலும்
திறந்தவெளிகளிலும் நடத்தி வந்தார்.

மூன்றாவது,
தியேட்டர் என்பது வெறும் உருவ ரீதியான ஒரு பரிசோதனை மட்டுமல்ல. அது நாடகம் குறித்த
ஒரு புதிய பிரக்ஞையின் வெளிப்பாடும்கூட. நடிகர்கள் பார்வையாளர்களுக் கிடையேயான உறவையும்
அனுபவ பரிவர்த்தனையையும் குறித்துத் தனித்துவமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட பாதல்
சர்க்காரின் இயக்கம் சமகால இந்திய நாடகத் துறைக்குப் புதிய பரிமாணங்களையும் வளங்களையும்
சேர்த்துள்ளது.

இவருடைய
சிறந்த நாடகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ‘மீதிச் சரித்திரம்
‘பஹுரூபிஎன்னும் நாடகக் குழுவினரால் ஸ்ரீசம்புமித்திரரின்
இயக்கத்தில் 1967ஆம் ஆண்டு முதன்முதலில் நடிக்கப்பட்டது.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க

அச்சில் இல்லாத வெளியீடுகளைக் குறித்த தகவல்களை இங்கு அழுத்திப் பெறலாம்.
Click here for details about out-of-print publications.

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.