லதா
2016
பக்கங்கள் : 96
ISBN 978-93-82394-22-8
விலை: ரூ. 110 + அஞ்சல் செலவு
“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப் புதைத்துவைத்திருக்கும் கவிதைகள் இவை. மென் உணர்வின் சுகந்தமும், தனிமையின் நெருடலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வலியும், வன்முறைக்கு எதிμõன குμலும் செறிவான படிமங்களின் ஊடாக இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன...”