Publications out for print

Showing results 1 - 10 of 58

நாற்காலிக்காரர்

மூன்று நாடகங்கள்) ந. முத்துசாமி

1974 | 112 பக்கங்கள் | விலை: ரூ. 8.00 | ISBN 81-85602-00-X

‘நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டுவது. இது ஒரு கதையை மேடையில் நடித்துக் காட்டுவது என்பதிலிருந்து வேறுபட்டது. இந்த நிகழ்த்திக்் காட்டல் என்பதில் நிகழ்ச்சி, கருத்து என்பவை தொனித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்த்திக் காட்டல், நடிப்பு என்பவற்றின் தொனிகளை இணங்கச் செய்தலில் புதிய காட்சிப் படிமம் உருக்கொள்கிறது.’ இதுநாள்வரை அறியப்பட்டதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இயக்கமாக நாடகம் இப்புத்தகத்தில் உருவாகிறது.

தக்கையின் மீது நான்கு கண்கள்

(சிறுகதைகள்) சா. கந்தசாமி

1974 | 104 பக்கங்கள் | விலை: ரூ. 8.00 | ISBN 81-85602-01-8

‘கந்தசாமியின் உலகம் சாதாரணமானவர்களின் உலகம். அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருப்பவர்கள்தான். வாழ்க்கையில்தான் பிரச்சினைகள் என்று கருதுகிறார்களேயன்றி, வாழ்க்கையே ஒரு பிரச்சினையாக எண்ணுவதில்லை. நமக்கு இதுகாறும் தெரியவராத ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்துகிறார் இவர்.’

வரும் போகும்

(கவிதைத் தொகுப்பு) சி. மணி

1974 | கெட்டி அட்டைக் கட்டு | 64 பக்கங்கள் | விலை: ரூ. 10.00 | ISBN 81-85602-02-6

‘தற்கால வாழ்க்கையின் ஆத்மார்த்தமற்ற தன்மையும், மதிப்புகளுக்கு ஏற்பட்ட சரிவும், போலித்தனமும் இவர் மனதைச் சுருங்க வைக்கின்றன. இவ்வுணர்வின் மெய்த்தன்மை படாடோபம் துறந்த அடக்கமான உணர்ச்சி கொண்ட இவர் கவிதைகள்மூலம் நிரூபணமாகிறது.....

சி. மணியின் புதிய நோக்கும், சொற்சிக்கனமும், இன்று எழுதப்பட்ட கவிதை என்றாலும்கூட, கோவில் பிரகாரத்தில் எண்ணெய் படிந்த தூண்கள் உணர்த்தும் காலம் விழுங்கிய குணமும், திடத்தன்மையும் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை.’

நடுநிசி நாய்கள்

கவிதைத் தொகுப்பு) பசுவய்யா

1975,1980 | 56 பக்கங்கள் | விலை. ரூ.7.00 | ISBN 81-85602-03-4

1959 இலிருந்து கவிதைகள் எழுதிவரும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) முதல் கவிதைத் தொகுப்பு. பசுவய்யாவின் கவிதைகள் தமிழில் புதுக் கவிதைக்கு ஆழத்தையும், செழுமையையும், வீச்சையும் சேர்த்திருக்கின்றன. புதுமைப்பித்தன் பாதிப்பு அடிப்படையில் இவரிடம் உருவான தமிழ் சிருஷ்டி–நடை புதிய கோலங்களையும், பரிமாணங்களையும் கொண்டது.

எட்டு முன்னணி ஓவியர்களின் செறிவான ஓவியங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

(இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1980இல் வெளியானது)

ஆய்வு நெறிமுறைகள்

டாக்டர் ஈ. சா. விசுவநாதன்

1976 | 74 பக்கங்கள் | விலை: ரூ. 6.00 | ISBN 81-85602-05-0

ஆராய்ச்சி மாணவர்க்கும் மற்றவர்க்கும் பயன்படும் முறையில் இந்தப் புத்தகத்தில், ஆராய்ச்சியின் பல்வேறு நிலைகள், விவரங்களைச் சேகரிக்கும் முறை, வகைப்படுத்துதல், குறிப்பெடுத்தல், கட்டுரையின் அமைப்பு, ஆதாரங்களைப் பற்றிய விதிமுறைகள் ஆகியவற்றைக் குறித்துத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் டாக்டா ஈ. சா. விசுவநாதன், மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ், சரித்திரம் கற்பித்தவர். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுரைகளின் மதிப்பீட்டாளராகவும் இருந்தவர்.

வேலி மீறிய கிளை

(கவிதைத் தொகுப்பு) நாரணோ ஜெயராமன்

1976 | 76 பக்கங்கள் | விலை ரூ. 6.00 | ISBN 81-85602-06-9

' இத்தகைய படைப்புக்களின் பாதிப்பில் நாகரிகங்கள் விழித்தெழுகின்றன. தம்மை விமர்சித்துக்கொள்கின்றன.... ஒதுங்கி நின்று அலட்சியமும் தெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, புரிந்து, கண்டுகொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸ மொழியில் வெளியிடும் விசேஷத் தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை....' - பிரமிள்

பல்லக்குத் தூக்கிகள்

(சிறுகதைகள்) சுந்தர ராமசாமி

1976 | கெட்டி அட்டைக் கட்டு | 90 பக்கங்கள் | விலை: ரூ. 6.00 | ISBN 81-85602-07-7

சுந்தர ராமசாமி தனது மெளனம் கலைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ‘முன்பு கேலியாகவும், எகத்தாளமாகவும் பார்த்துச் சொன்ன விஷயங்களை இப்பொழுது பிரச்சினைக்குரிய தீவிரத்துடன் அழுத்தமாக அணுகுகிறார்... இப்பொழுதைய எழுத்தில் நிதானம் மிகுந்த ஆத்மா கலந்திருக்கிறது. தன்இருப்பு, வாழ்க்கை பாதிப்புக்கள் இவைகளின் தொடர்ந்த போராட்டமாய் கலை, ஓர் ஆத்மபூர்வமான வெளிப்பாடாக சுந்தர ராமசாமியின் புதிய எழுத்தில் உருக்கொண்டிருக்கிறது... துன்பங்கள், பிரச்சினைகள், உயர்வுகளின் சன்னிதானத்தில் நிர்வாணமாக நிற்கின்ற ஒரு மனதை சுந்தர ராமசாமியின் எழுத்தில்’ காணலாம்.

முன்னுரையில் நா. ஜெயராமன்

மீட்சி விண்ணப்பம்

(கவிதைத் தொகுப்பு) தி. சோ. வேணுகோபாலன்

1977 | கெட்டி அட்டைக் கட்டு | 40 பக்கங்கள் | விலை: ரூ. 5.00 | ISBN 81-85602-08-5

தி. சோ. வேணுகோபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. 1965 முதல் 1975 வரை பல சிற்றேடுகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளும், புதிய கவிதைகள் சிலவும் அடங்கியது. ‘ஏமாற்றும்’ எளிமை கொண்ட இவர் கவிதைகள் தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்ப்பதைப் பார்க்கலாம்.

நெல் சாகுபடி

எஸ். எஸ். நாகராஜன்.எம்.எஸ்ஸி

1977 | கெட்டி அட்டைக் கட்டு | 280 பக்கங்கள் | விலை: ரூ. 13.50 | ISBN 81-85602-09-3

“விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும், மகசூல் வளம் முழுவதையும் பெற விடாது செய்யும் தடைகளைக் குறித்தும் திரு. நாகராஜனுக்கு அசாதாரணமான தெளிவும், கூர்மையான பார்வையும் இருக்கின்றன. மிகத் தெளிவுடனும், துல்லியமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் விவசாயிகள், மாணவர்கள், விஸ்தரிப்புப் பணியாளர்கள், நெல் சாகுபடியில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயன் தருவதாக இருக்கிறது.”
முன்னுரையில் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன்

மெளனி கதைகள்

(சிறுகதைகள்) மெளனி

1978 | கெட்டி அட்டைக் கட்டு | விலை: ரூ. 6.00 | ISBN 81-85602-10-7

மெளனியின் கதைகளின் இயல்பை அசாதாரணம் என்னும் ஒரு சொல்லால் குறித்துவிடலாம். ஏனெனில் இவரது கதைகளின் சிறப்பை மட்டும் இச்சொல் குறிக்கவில்லை; ஏனென்றால் இவை போன்றதை மற்ற பலருடைய கதைகளில் பார்க்க முடிவதில்லை. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களாகத் தெரிந்தாலும் ஒரு சில சூழலிலோ அல்லது உணர்ச்சியிலோ சிக்கி அசாதாரண நிலையில் காட்சி தருபவர்கள்...

மெளனியின் அசாதாரண இயல்புக்கும் நடையின் நெரடுக்கும் பல காரணங்கள் உண்டு. ஒன்று, அவரது பார்வையின் ஆழமும் கூர்மையும்.... இரண்டாவது, அவர் நடையிலுள்ள கவிதைத் தன்மை.... மற்றொரு காரணம்... ஒளி கூட்டும் சக்திமிக்க குறியீடுகள்......

Showing results 1 - 10 of 58

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.