க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

பயனாளி இல்லையா?

தொடர்ந்து வளரும் க்ரியா அகராதியின் இணையப் பதிப்பை சந்தா செலுத்தி பதிவுசெய்க.

Not a user? Please register

Register for paid access to the current, expanding online version of the Cre-A: Dictionary.

பதிவுசெய்க / Register

தற்போது விற்பனையாகும் புதிய பதிப்பைப் பற்றிய விவரங்களை இங்கே அழுத்திப் பெறலாம்.

சொற்களைத் தேடுவதற்கான வழிமுறை / Search Tips

சொல்லின் பொருளை அறிய நீங்கள் தேடும் சொல்லைத் 'தேடும் சொல்' என்று குறிப்பிட்டுள்ள கட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

வினைச்சொல்லை, வினை திரிபு அடைவதற்கு முன் உள்ள வடிவத்தில் பதிவுசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டு:

  • எழுது
  • வா
  • தா

பெயர்ச்சொல்லை எழுவாய் வடிவத்திலோ —ஆக, —ஆன ஏற்றிருக்காத வடிவத்திலோ வேற்றுமை உருபு முதலியவை ஏற்பதற்கு முன் உள்ள வடிவத்திலோ பதிவுசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டு:

  • அன்பு
  • இவன்
  • கண்கூடு

பெயரடைகள் பல்வேறு வடிவங்களில் வரும். அவற்றை அவை இருக்கும் வடிவத்திலேயே பதிவுசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டு:

  • ஆழ்ந்த
  • இளம்
  • நல்ல
  • மர்ம

வினையடைகள் பல்வேறு வடிவங்களில் வரும். அவற்றை அவை இருக்கும் வடிவத்திலேயே பதிவுசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டு:

  • அக்கக்காக
  • அடுத்து
  • இனி
  • கட்டோடு

சொல்லைப் பதிவுசெய்துவிட்டு, ‘தேடு’ என்ற கட்டத்தில் அம்புக்குறியை வைத்து அழுத்தினால், நீங்கள் தேடும் சொல்லின் பதிவு தெரியவரும்.

க்ரியாவைப் பற்றி

1974இல் துவங்கப்பட்ட க்ரியா பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம் தவிர சில இந்திய மொழிகளிலிருந்தும், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும் நேரடி மொழிபெயர்ப்புகள் பலவற்றையும், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல்,தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு மொழியைப் பல துறைகளிலும் பயன்படுத்திய அனுபவம் தற்காலத் தமிழ் அகராதி ஒன்று தேவை என்பதை உணர்த்தியதால் 1985இல் துவங்கப்பட்ட அகராதிப் பணிகள் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் முப்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

1992இல் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' வெளியிடப்பட்டது. தமிழ்த் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அகராதியின் திருத்தி விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு 2008இல் வெளியாயிற்று. அகராதியின் இரண்டு பதிப்புகளும் தற்காலத் தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. புதிய இரண்டாவது பதிப்புக்குச் சுமார் 75 லட்சம் சொற்கள் கொண்ட சொல்வங்கி தளமாக அமைந்தது.

இந்தச் சொல்வங்கி, தற்காலத் தமிழின் பல கூறுகளையும் விளக்கும் ஒரு மூலவளம். இந்த மூலவளம் தமிழில் அக்கறை கொண்டவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது க்ரியாவின் இணையதளத்தில் 35 லட்சம் சொற்களுடன் தரப்பட்டிருக்கிறது. இது தொடர்ச்சியாக விரிவாக்கப்படவிருக்கிறது.

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.