(கவிதைகள்)ஷார்ல் போத்லெர் (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்:மொழிபெயர்ப்பு குமரன் வளவன்)
ஆண்டு: 2012
பக்கங்கள் : 96
ISBN 978-81-921302-3-1
விலை: ரூ. 125 + அஞ்சல் செலவு
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’(Les Fleurs du Mal) என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவரும், உலகக் கவிஞர்களால் ‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படுவருமான ஆளுமைதான் ஷார்ல் போத்லெர் (1821-1867).
இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில் மலர்பவை அல்ல. மாறாக, நச்சுத் தாவரம்
ஒன்றிலிருந்து பயனுள்ள மருந்தைச் சாறாகப் பிழிந்தெடுப்பதைப் போல, சொற்களின் உதவியுடன் தீமையைப் பேயோட்டுவதைப் போலக் கவிஞன் செயல்படுவதால் கிடைக்கும் மலர்கள்.
விகாரத்தின் இருளுக்குள் மேற்கொள்ளப்படும், தலைசுற்ற வைக்கும், சவாலான ஒரு பயணம் இது.