மொழியில் உதித்த பேரரசு
First Edition 2024
Soft Bound
ISBN 9788196585594
Price: Rs. 650 + Postage
துரைகளுக்கு அவர்களுடைய முதல் நாக்கினால் அவர்களுக்கு எப்போதும் பெருமை. அதுவே அவர்களை வெள்ளை நிறமுடைவர்களாகக் காட்டுகிறது. அதுவே மற்றவர்களைப் பணிய வைக்கிறது. அதுவே பிரம் மாண்டத்தைக் காட்டுகிறது. அதுவே சொல்லால் வன்முறை புரிகிறது. இரண்டாவது நாக்கினால் அவருக்குப் பெருமை எதுவும் இல்லை. ஆனால், லாபம் உண்டு. அது ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவரும் அவர் காலனியப்படுத்திய மக்களும் சமம் என்னும் மாயக் காட்சியை உருவாக்குகிறது. சுரண்டுவது தெரியாமல் சுரண்டுகிறது.