மார்கெரித் யூர்ஸ்னார்
First Edition August 2006
பக்கங்கள் : 166
soft bound
ISBN 9788185602882
விலை: ரூ. 260 + அஞ்சல் செலவு
நாம் எல்லோருமே ஓயாமல் ஏதாவதொரு அனுபவத்திற்கான அறிமுக நுழைவாயில் வழியாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தற்செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு இன்பமும், ஒவ்வொரு இன்னலும் அறிமுகங்களே. அழகான புத்தகத்தைப் படிப்பதும், மகத்தான நிலப்பரப்பைப் பார்ப்பதும் அப்படித்தான். ஆனால், அதை உணரும் அளவுக்குக் கவனமாக இருப்பவர்களோ, சிந்தித்துப்பார்வர்களோ வெகு சிலரே; என்னைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமாக அல்லது அப்படிக் கருதப்படுகிற மக்களைத் தவிர.”
“ எந்த மகிழ்ச்சியும் ஒரு உன்னதப் படைப்பே; ஒரு சிறிய தவறுகூட அதைப் பொய்யாக்கிவிடுகிறது. சிறு தயக்கம்கூட அதை மாற்றிவிடுகிறது. மிகச் சிறிய சுமைகூட அதை விகாரமாக்கிவிடுகிறது. முட்டாள்தனமான சிறிய செயல்கூட அதை அறிவற்றதாக ஆக்கிவிடுகிறது.”