கவிதைகள்
2
பக்கங்கள் : 74
Soft bound
ISBN 978-81-965855-3-2
விலை: ரூ. 200 + அஞ்சல் செலவு
மின்னல்வெட்டுபோல்
என் உறக்கத்தைக் கவிதைகள் கலைத்தபோதும், சற்றும் எதிர்பாராத நேரத்தில் அறிக்கை இன்றி உந்துதல்கள் வந்தபோதும் பேனாவைக் கை பற்றியபோது அது
தானே எழுதிய இந்தக் கவிதைகள் எங்கிருந்தோ வந்தவை.
கவிதையும் முழுக் கவிதையாகவே
என் மனதில் தோன்றியது. இப்போது ஒரு வரியும், அப்போது
ஒரு வரியுமாக எந்தக் கவிதையையும் எழுதவில்லை. இதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று
நிதானமாகச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல இந்தக் கவிதைகளின்
கருத்துகள்.
மாதத்தில் நான்கு கவிதைகள் தோன்றியும், ஆறு மாதங்களுக்கு இரண்டு
கவிதைகளுக்கு மேல் தோன்றாமலும் இருந்திருக்கிறது.
ஒரு கவிதை தோன்றியபோது அதை முழுமையாக எழுதுவதற்குச்
சில நிமிடங்களே பிடித்தது. எழுதி முடித்துப் பல நாட்களான பிறகு
அவ்வப்போது கவிதைகளுக்கு லேசாக மெருகேற்றினேன்.