1
பக்கங்கள் : 320
ISBN 978-81-965855-6-3
விலை: ரூ. 450 + அஞ்சல் செலவு
பொறந்ததுல இருந்து எந்தச் சத்தத் தையும் கேக்காத அவங்களுக்குள்ள சின்னச் சின்னதா சத்தங்களை அனுப்பிக் கேக்க வைக்கிற நுட்பத்தை நான் புரிஞ்சுக்கணும். மௌனத்தையே பருகுன மாதிரி இருக்கும் அவங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையா ஊட்டி, வெளிய வர்ற ஒவ்வொரு மூச்சுக் காத்தையும் வார்த்தையா, ஒரு மொழியா மாத்திக்காட்டுற வித்தையை நானும் கத்துக்கணும்.
“மௌனத்துக்குள்ள கடவுளைத் தேடும் துறவிங்களோட ஒரு ஆன்மீகப் பயணம் மாதிரி, மௌனமா இருக்கும் இவங்களுக்குள்ள இருந்து நான் வார்த்தைகள் மூலம் கடவுளைக் கண்டடையணும். அந்தச் சூட்சமத்தை நீங்கதான் எனக்குச் சொல்லித் தரணும். பெரும் நதி சமுத்திரத்தைத் தேடிக் கண்டடைகிற மாதிரி நான் இவ்ளோ தூரம் உங்களைத் தேடி வந்திருக்கேன் என்று சொல்லி முடித்ததும் திலகா இலேசாகச் சிரித்துவிட்டு கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.