(நாடகம்)சுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்: வி. சரோஜா)
இரண்டாம் பதிப்பு 2009
பக்கங்கள் : 100
ISBN 978-81-85602-95-0
விலை: ரூ. 80 + அஞ்சல் செலவு
உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு நூலிழையாக நைந்து இற்றுப்போக ஆரம்பிக்கிறது — புத்தக வாழ்விலிருந்து, வாழ்க்கையை வாழும்வரையான, இந்தத் துணிச்சலான, ஆனால் வேதனை நிரம்பிய பயணத்தின் அத்தாட்சிப் பதிவேடு இ்ந்நாடகம்.