அவர் கலையும் வாழ்வும்
2017
பக்கங்கள் : 392
ISBN 978-93-82394-26-6
விலை: ரூ. 495 + அஞ்சல் செலவு
டி. பாலசரஸ்வதியின் (1918-1984) முழுமையான
முதல் வாழ்க்கை வரலாறு இது. தென்னிந்தியாவைச்
சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞரான இவர்,
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக்
கலைஞர்களில் ஒருவராக உலகம் முழுவதிலும்
அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவில் தான் வாழ்ந்த
காலத்திலேயே இவர் காவிய அந்தஸ்தைப்
பெற்றிருந்தார். முப்பது வயதிற்குள்ளாகவே மரபுசார்
பரதநாட்டியத்தின் மிக முக்கியமான கலைஞர் எனப்
பெயர்பெற்றார். பாலசரஸ்வதி தன் கலையின்பால்
பேராவல் கொண்ட கலகக்காரர். முற்றிலுமாக நவீனக்
கலைஞர். அவரது சமகாலத்தில் இந்தியாவிலும்
மேற்குலகிலும் இருந்த மிக முக்கியமான நடனக்
கலைஞர்கள் சிலர் அவரது தாக்கத்தின் வலிமையைப்
பறைசாற்றினார்கள். அவரது கலையும் வாழ்வும் ஒரு
மரபின் இதயத்தை வரையறுத்தன.
தென்னிந்திய நடன பாணிகளின் ஊற்றுக்கண்களாக
விளங்கிய தாய்வழிப்பட்ட தேவதாசிச் சமூகம்,
மரபுசார் கலைப் பயிற்சி ஆகியவை குறித்த
அசாதாரணமான பார்வையை அவரது கதை
நமக்குச் சொல்கிறது.
ஆழ்ந்த ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இந்த
வரலாறு, தன்னுடைய வாழ்வு குறித்த
பாலசரஸ்வதியின் தனிப்பட்ட கண்ணோட்டம்,
நடனத்தையும் இசையையும் உருவாக்குவது குறித்த
அவரது சிந்தனைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத்
தருகிறது. பாலசரஸ்வதியின் அரை நூற்றாண்டுக்
காலத் தொழில் வாழ்வில் அவரோடு பயணித்த
குடும்ப உறுப்பினர்கள், சமகாலக் கலைஞர்கள்
ஆகியோரின் கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
நவீன இந்தியாவில் கிட்டத்தட்ட மறைந்துபோய்விட்ட மரபுசார் கலைஞர்களின் கலை
விழுமியங்களையும் மரபுகளையும் இந்தக் கருத்துகள்
வெளிப்படுத்துகின்றன. பாலசரஸ்வதியின்
நடனத்தையும் அவர் வாழ்வின் சில தருணங்களையும்
சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் பலவும் இந்நூலில்
இடம்பெற்றிருக்கின்றன.