விக்தோர் ஹ்யூகோபிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பும் பின்னுரையும்குமரன் வளவன்மொழிபெயர்ப்பில் ஆலோசனை வெ. ஸ்ரீராம்
First edition 2015
பக்கங்கள் : 112
ISBN 978-93-82394-14-3
விலை: ரூ. 165 + அஞ்சல் செலவு
விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம்...
இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான்... வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போராட்டங்களாகவும் முன்நிறுத்தினார்...